நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, சபாநாயகர் கருஜயசூரிய தயாராக இருப்பதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில், சர்வதேசத்தாலும் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவரையே தெரிவுசெய்யவேண்டும் என அவர் தெரிவித்தார். இதனால் ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை பொதுஜன பெரமுனவுடன் இணையுமாறு அழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தினருக்கான விசேட பயிற்சி வழங்கும் திட்டமொன்றினை ரஷ்யா முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க சமீபத்தில் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யா சென்றிருந்தார்.
முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் வீதியை விட்டு விலகிய கூலர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.