முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு திம்பிலி இளைஞர் கராட்டி கழகத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் மத்தியகுழு உறுப்பினரும்,
முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சருமான கந்தையா சிவநேசன் ஊடாக வழங்கப்பட்ட 10,000ரூபா நிதியினை கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் வே.சிவபாலசுப்பிரமணியம் அவர்கள் இன்று மேற்படி கராட்டி கழகத்திற்கு கையளித்துள்ளார். அவருடன் கட்சி அங்கத்தவர் நகுலனும் உடன் சென்றிருந்தார்.
முல்லைத்தீவில் வைத்து வவுனியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் உள்ளிட்ட 4 பேரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெயரை இன்றுமாலை கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
உயர் பதவிகள் குழுவினால் 13 புதிய தூதரகங்களின் தலைவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரச சேவைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள அல்லது நியமிக்கப்பட்டுள்ள நபர்களின் ஏற்புடைய தன்மையை ஆராய்வதற்கான பாராளுமன்ற உயர் பதவிகள் குழு (உயர் பதவிகள் குழு) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்களாக பரிந்துரை செய்யப்பட்ட பதின்மூன்று நபர்களை அங்கீகரித்துள்ளது.
கம்போடியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 12.55 மணியளவில் ஜனாதிபதி உட்பட குழுவினர் இவ்வாறு நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.