உயர் பதவிகள் குழுவினால் 13 புதிய தூதரகங்களின் தலைவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரச சேவைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள அல்லது நியமிக்கப்பட்டுள்ள நபர்களின் ஏற்புடைய தன்மையை ஆராய்வதற்கான பாராளுமன்ற உயர் பதவிகள் குழு (உயர் பதவிகள் குழு) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்களாக பரிந்துரை செய்யப்பட்ட பதின்மூன்று நபர்களை அங்கீகரித்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குறித்த பதின்மூன்று புதிய தூதரகங்களின் தலைவர்களில், ஒன்பது பேர் இலங்கை வெளிநாட்டு சேவையைச் சேர்ந்த தொழில்முறை இராஜதந்திரிகளாவர்: ஏ.எஸ். கான் நைஜீரியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர், யு.எல். முஹம்மத் ஜவுஹர் குவைத்திற்கான இலங்கைத் தூதுவர், Read more
கம்போடியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 12.55 மணியளவில் ஜனாதிபதி உட்பட குழுவினர் இவ்வாறு நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு, சபாநாயகர் கருஜயசூரிய தயாராக இருப்பதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தினருக்கான விசேட பயிற்சி வழங்கும் திட்டமொன்றினை ரஷ்யா முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க சமீபத்தில் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யா சென்றிருந்தார்.
முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் வீதியை விட்டு விலகிய கூலர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற அடிப்படையில் சந்திப்பொன்று நடைபெற்றதே தவிரவும் எவ்விதமான தீர்க்கமான தீர்மானங்களையோ உறுதிமொழிகளையோ வழங்கும் வகையில் அச்சந்திப்பு இடம்பெற்றிருக்கவில்லை எனவும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவிற்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியை அமைக்க வேண்டும் என கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் பிரதான சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு நிரந்தர நீதாய நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் கொச்சினுக்கு இடம்பெறும் விமானசேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.