கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கடந்தவாரம் காணாமல் போன பாடசாலை மாணவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பளை முள்ளியடியை சேர்ந்த  அனோஜன் என்ற  மாணவன்  கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பளை புளோப்பளை கடல் நீரேரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.