கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளாக 152 பேர் நேற்று (27) இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 92 பேர் குவைட்டிலிருந்து வருகைதந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என்பதுடன், 53 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. Read more
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை (29) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்ட அமுலாக்கம் தொடர்பான புதிய அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று மதியம் வெளியிட்டது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு தெற்கு பகுதியில் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது கைக்குண்டுகள் சில இனம் காணப்பட்டுள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.