 உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களை புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களை புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் நேற்று காலையில் இருந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வந்த வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், 8ஆவது நாளான நேற்றுமுதல் தமது போராட்டத்தை உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுத்துள்ளனர்.
தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்தே, இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் கு.தர்ஷன், முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர் ஆகியோரும் சென்றிருந்தனர். 