 திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர், திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் இன்று (15) உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர், திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் இன்று (15) உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தங்களுக்கு சர்வதேச நீதி வேண்டியே இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை தாம் ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
“அரசியல் கைதிகளை விடுதலை செய்”, “சிறந்த தீர்வை ஐக்கிய நாடு பெற்றுத் தா”, “சாகும் வரை உண்ணா விரதம்”, “காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே?” போன்ற சுலோகங்களை அவர்கள் ஏந்தியிருந்தனர்.