 மக்களுக்கு வழங்கக்கூடிய Unlimited எனப்படும் எல்லையற்ற இணைய பாவனைக்கான தரவுகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இணைய சேவை வழங்குநர்களுக்கு அறிவித்துள்ளது.
மக்களுக்கு வழங்கக்கூடிய Unlimited எனப்படும் எல்லையற்ற இணைய பாவனைக்கான தரவுகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இணைய சேவை வழங்குநர்களுக்கு அறிவித்துள்ளது.
இணைய சேவை வழங்குநர்களிடமிருந்து கிடைத்துள்ள Package-களுக்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, புதிய எல்லையற்ற இணைய வசதிகளை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.