 யாழ். கொல்லங்கலட்டி செந்தாவத்தையைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட வறுமைக் கோட்டின்கீழ் வாழும் அ.கிருஷ்ணமூர்த்தி என்பவரின் குடும்பத்துக்கு வாழ்வாதார உதவியாக பசுமாடு ஒன்று கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளது.

அதற்கான செலவில் 35,000 ரூபாய் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சுவிஸ் கிளை ஊடாக வழங்கிய நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 4.30மணியளவில் இடம்பெற்ற உதவி வழங்கும் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன், கட்சியின் வலிதெற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.தர்சன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.