ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் வேறு சில தரப்பினர் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி, அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சேலினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவுக்கு, நேற்று (27) அறிவித்தனர். Read more
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒருநாள் வேலை நிறுத்தத்தில் பல தொழிற்சங்கங்கள் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
ஞானசார தேரரின் தலைமையில் ‘ஒரு நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
கெரவலப்பிட்டிய யுகதனவி அனல் மின்நிலையத்தின் அரசாங்கத்துக்கு சொந்தமான 40 சதவீத பங்குகளை, அமெரிக்காவை தளமாகக் கொண்ட நியூ போட்ரெஸ் எனெர்ஜி நிறுவனத்துக்கு வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்கான அதிகாரம், துணை வேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், எந்த நேரத்திலும் பல்கலைக்கழகங்களை அவர்கள் ஆரம்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், இராணுவம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள், நாளை மறுதினம் (28) விடுவிக்கப்படவுள்ளன என, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தெரிவித்துள்ளார்.
அமரர் சுப்பிரமணியம் சதானந்தம்