Header image alt text

வவுனியா மாவட்ட நிர்வாக கூட்டம் மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகர சபையின் உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களின் தலைமையில் 24/10/2021 அன்று மாலை 4.30 மணிக்கு வவுனியா மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. Read more

உலகிலேயே அதியுயர் தொழில்நுட்பம் வாய்ந்த டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் அறிமுகப்படுத்தத் தயார் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். Read more

தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிரா (Sugiyama Akira), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (25) முற்பகல் சந்தித்தார். Read more

பளை கல்விக் கோட்ட அலுவலகத்துக்கு முன்பாக, இன்று (25) பிற்பகல் 2 மணியளவில், ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடளாவிய ரீதியில், ஆசிரியர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், கிளிநொச்சியிலும், போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகள் சிங்கப்பூருக்குச் செல்ல எதிர்வரும் 27 ஆம் திகதியிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு, சிங்கப்பூர் அரசாங்கம் பயணத்தடையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது தொகுதிவாரி மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் முறையே 70 சதவீதம் மற்றும் 30 சதவீதம் என்றடிப்படையில் பகிரப்படும் முறையை பின்பற்றுவது பொருத்தமானது என பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. Read more

ஆரம்பப் பிரிவு மாணவர்கள், தமக்குப் பொருத்தமான எந்த ஆடையிலும் நாளை (25) பாடசாலைக்குச் சமுகமளிக்க அனுமதிக்கப்படுவர் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். Read more

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் 4 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு தினத்தில், ஒரே தடவையில் நடத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய பிரேரணை முன்வைத்ததுள்ளது. Read more

இந்தியாவின் முதல் பயிற்சி படையணியின் 6 இந்திய கப்பல்கள் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளன. Read more

மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இலங்கைக்கான கியூப தூதுவர் Andrés Marcelo Garrido-வுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சிநேகபூர்வமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், இருதரப்பு நட்புறவு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more