சலுகைகள் மற்றும் அமைச்சுப் பதவிகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், தற்போதைய அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசாங்க தரப்பினர் பரப்பும் போலியான தகவல்களை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். Read more
சீனாவினால் மியான்மரில் உள்ள கோகோ தீவுகளில் இராணுவ வசதி ஒன்று நிர்மாணிக்கப்படுகின்றமை மற்றும் இலங்கையில் முன்மொழியப்பட்ட தொலைதூர செயற்கைக்கோள் தரை நிலைய அமைப்பு என்பனவற்றின் செயற்பாடுகள் பிராந்தியத்தின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கவலை வெளியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி வழங்குமாறும், அதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறும் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவுஸ்திரேலிய – இலங்கை சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.