Header image alt text

இந்தியாவின் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் – யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தியாவின் காரைக்கால் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். Read more

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனை மீளச் செலுத்தும் காலத்தை பங்களாதேஷ் மேலும் 06 மாதங்களுக்கு நீடித்துள்ளது. பங்களாதேஷிடமிருந்து பெறப்பட்ட கடனின் முதல் பகுதியை ஆகஸ்ட் மாதத்திலும் இரண்டாம் பகுதியை செப்டம்பர் மாதத்திலும் இலங்கை செலுத்த வேண்டும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷ் 200 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளது.

சலுகைகள் மற்றும் அமைச்சுப் பதவிகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், தற்போதைய அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசாங்க தரப்பினர் பரப்பும் போலியான தகவல்களை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். Read more

சீனாவினால் மியான்மரில் உள்ள கோகோ தீவுகளில் இராணுவ வசதி ஒன்று நிர்மாணிக்கப்படுகின்றமை மற்றும் இலங்கையில் முன்மொழியப்பட்ட தொலைதூர செயற்கைக்கோள் தரை நிலைய அமைப்பு என்பனவற்றின் செயற்பாடுகள் பிராந்தியத்தின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி வழங்குமாறும், அதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறும் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு  தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவுஸ்திரேலிய – இலங்கை சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களின் ஒன்றுகூடும், கருத்து வௌியிடும் உரிமைகளுக்கும், ஊடக சுதந்திரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகவியலாளர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படும் இந்த சட்டமூலமானது, உரிமைகள் மீதான கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக சம்மேளனம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியை சர்வதேச நாணய நிதியம் (IMF) தற்காலிகமாக அதிகரித்துள்ளது. இதற்கிணங்கவே இலங்கை மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு கடனுதவியை வழங்கியதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். Read more

இலங்கைக்கான கடன் பேச்சுவார்த்தை நடைமுறையில் அனைத்து கடன் வழங்குநர்களும் இணைந்துகொள்ள முடியும் என ஜப்பானிய நிதி அமைச்சர் ஷூனிச்சி சுஸூகி (Shunichi Suzuki) தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சீனா இணைந்துகொள்வதை இலக்காகக்கொண்டு இந்த கருத்து வௌியிடப்பட்டுள்ளது. Read more

இலங்கையின் கடன் நிவாரண பேச்சுவார்த்தைகளில் தலையிடப் போவதில்லை என சர்வதேச நாணய நிதியம் (IMF)  அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டுக்குள் இலங்கை செலுத்த வேண்டிய 17 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இடைவௌியுடன், மொத்தமாக 24 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இடைவௌியை இலங்கையின் கடன் நிவாரண செயற்பாடு நிரப்பும் என எதிர்பார்ப்பதாக, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். Read more