வவுனியாவில் ஒளி விழாவும் முன்பள்ளி சிறார்களின் பிரியாவிடை நிகழ்வும்-
வவுனியா எல்லப்பர்மருதங்குளம் கணேஷா முன்பள்ளியில் ஒளி விழாவும் முன்பள்ளி சிறார்களின் பிரியாவிடை நிகழ்வும் இன்று (04.12.2014) வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் முன்பள்ளி ஆசிரியர் திருமதி.செல்வராணி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதவும், கோயில்குளம் இளைஞர் கழக இஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் கௌரவ விருந்தினர்களாக தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திரு.ராஜசேகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.அருள்குமார், குடும்பநல உத்தியோகத்தர் திருமதி. பிரவீனா ஆகியோரும் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.