Header image alt text

இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். Read more

இலண்டனில் தங்கியிருந்த  221 இலங்கையர்கள் விசேட விமானம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீ லங்கா விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவைப்படும் உபகரணங்களை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவுறுத்தியுள்ளார். Read more

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி  தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஜூன் முதலாம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த 9 பேரில் 6 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய மூன்று பேரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளாக 152 பேர் நேற்று (27) இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 92 பேர் குவைட்டிலிருந்து  வருகைதந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என்பதுடன், 53 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. Read more

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி  தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை (29) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read more

மே மாதம் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்ட அமுலாக்கம் தொடர்பான புதிய அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று மதியம் வெளியிட்டது. Read more

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு தெற்கு பகுதியில் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது கைக்குண்டுகள் சில இனம் காணப்பட்டுள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள். Read more

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களுடைய இழப்பு மலையக மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். இவருடைய பேரனார் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் காலம் தொட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகத்தில் ஒரு மாபெரும் தொழிற்சங்கமாகவும் அத்துடன் ஒரு அரசியல் கட்சியாகவும் இருந்து வருகிறது. Read more