 வவுனியா கணேசபுரம் திருநாவுக்கரசர் முன்பள்ளி மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும்  கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் 11.30மணியளவில் நடைபெற்றது.
வவுனியா கணேசபுரம் திருநாவுக்கரசர் முன்பள்ளி மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும்  கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று முற்பகல் 11.30மணியளவில் நடைபெற்றது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சுவிஸ் கிளை ஊடாக வழங்கிய நிதியிலிருந்து நான்காவது கட்டமாக இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்பள்ளியின் பொறுப்பாசிரியை அமிர்தலிங்கம் மோகனச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் சுப்பையா ஜெகதீஸ்வரன் (சிவம்), கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களான த.யோகராஜா, வே.குகதாசன், பரிஹரன் மற்றும் ஆசிரியை தெ.நிர்மலா, முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.