வவுனியா நகரம் 2 முன்பள்ளி விளையாட்டு விழா இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் வன்னி பாஉ திலீபன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி லிங்கநாதன், நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம், முன்பள்ளி உதவி கல்விப் பணிப்பாளர் உட்பட முன்பள்ளி ஆசிரியர்கள்,பெற்றோர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். Read more
வவுனியா வேப்பங்குளம் பாரதி முன்பள்ளியின் 10வது ஆண்டு நிறைவு விழாவும் கண்காட்சியும் நடைபெற்றது. இதில் வன்னி பா உ வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் DR சத்தியலிங்கம், ஜிரிலிங்கநாதன், மயூரன் முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடன்(IMF) ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,711ஆக அதிகரித்துள்ளது.
அரசாங்கத்தில் இருந்து விலகிய பங்காளிக் கட்சிகளினால் உருவாக்கப்பட்டுள்ள மேலவை இலங்கை கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு, மஹரகமயில் இன்று (04) இடம்பெற்றது.
நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்களுக்கும் இலங்கை அதிகாரிகளும் இடையேயான பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டியமை குறித்து மகிழ்ச்சியடைவதாக, நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, இன்று (04) தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி இரண்டாவது தவணை செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகும்.