Header image alt text

சர்வதேச குத்துசண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வவுனியாவை சேர்ந்த வவுனியா இந்துக்கல்லூரியின் பழைய மாணவி கந்தசாமி டிலக்சினி ( எமது கழகத் தோழரின் புதல்வி) அவர்களை பாடசாலை சமூகத்தினர் கௌரவிக்கும் நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வவுனியா மண்ணிக்கு பெருமை சேர்த்த வீராங்கனையை கௌரவித்தபோது.. Read more

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடங்கிய தேசிய சபை ஒன்றை அமைப்பதற்கான நகல் சட்டமூல வரைவுக்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்த்தன, இதுதெடர்பான நகல் சட்டமூலத்தை கட்சித்தலைவர்களிடம் முன்வைத்துள்ளார். பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இது சமர்ப்பிக்கப்பட்டது. Read more

குருநாகல், யக்கபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவத் தளபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. Read more

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதி தொடர்ந்து மீறப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம்ஒடுக்குவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. Read more

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே உட்பட மூவரை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, 28 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமை உட்பட நேற்று (30) இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் 2ஆம் தவணை விடுமுறைக்காக செப்டெம்பர் 7ஆம் திகதி மூடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மீண்டும் செப்டெம்பர் 13ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கான அவசரகால கடனொன்றுக்கு இலங்கையும், சர்வதேச நாணய நிதியமும் (ஐ.எம்.எஃப்) வந்துள்ளதுடன், உத்தியோகபூர்வமான அறிவிப்பானது நாளை விடுக்கப்படுமென இவ்விடயம் குறித்து நேரடியாக அறிந்த நான்கு தகவல் மூலங்கள் தெரிவித்ததாக றொய்ட்டர்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. Read more

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபர் ஊடாக உயர்நீதிமன்றத்துக்கு, இன்று (31) அறிவித்தார். போதைப் பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019ஆம் ஆண்டு தீர்மானித்திருந்தார். Read more

30.08.1991 – 30.08.2022

ஈழத்து கவிஞரும், “தோழி” இதழின் ஆசிரியரும், பெண்ணிலைவாதியுமான தோழர் செல்வி (செல்வநிதி தியாகராஜா) அவர்களின் 31ம் ஆண்டு நினைவு நாள்….

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை தன்னால் அறிவிக்க முடியும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட ஒப்பந்தம் ஒன்றின் முதல் மைல் கல்லை விரைவில் அடைய முடியும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.