Header image alt text

மக்கள் போராட்டம் தொடர்பில் சமூகவலைத்தளத்தில் தகவல்களை பகிர்ந்த வெளிநாட்டு பெண்ணின் கடவுச்சீட்டை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது. வீசா நிபந்தனைகளை மீறியமைக்காக பிரித்தானியாவைச் சேர்ந்த இளம் பெண்ணின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. Read more

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் இ.தொ.காவுடன் கலந்துரையாடலை முன்னெடுத்தனர். இதில், இ.தொ கா தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

வௌ்ளிக்கிழமைகளில் அரச அலுவலகங்களை மூடுவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால்  வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்தை உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Read more

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அவரை அமைச்சர் பதவியில் இருந்து அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியிருந்தார். Read more