Header image alt text

31.07.1988இல் வவுனியாவில் மரணித்த தோழர் காஸ்ட்ரோ (சவரிமுத்து வெள்ளிமயில்- முல்லைத்தீவு), தோழர் ஆனந்தபாபு (கிருஷ்ணகுமார்- திருகோணமலை) ஆகியோரின் 34ஆவது நினைவு நாள் இன்று….

சீனாவின் ஆய்வுக் கப்பலான Yuan Wang 5 எனும் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் இலங்கைக்கு வரப்போவதில்லை என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு பல சந்தர்ப்பங்களில் மறுத்த போதிலும், நேற்றைய தினம் கப்பல் வந்ததை உறுதிப்படுத்தியது. Read more

சர்வதேச நாணய நிதியத்தில் சீனா அங்கத்துவம் பெற்றுள்ளதால்,பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனத் தூதுவர் சி ஷெங்ஹாங் வலியுறுத்தியுள்ளார். பணிப்பாளர் சபை கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பில் தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more

வாகன இலக்க தகட்டின் கடைசி இலக்கம் மற்றும் டோக்கன் முறை போன்றவை ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் செல்லுபடியாகாது என்றும் அன்றையதினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற நெரிசல் ஏற்படக்கூடிய வகையில் ஒன்று கூட வேண்டாம் என்றும் வலுச்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. Read more

மின்சார பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும் மற்றும் இ-பில் சேவையைப் பதிவுசெய்யவும் நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது. Read more

தமிழர் விடுதலைகூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான கலாநிதி நீலன் திருச்செல்வன் அவர்களின் நினைவுதின நிகழ்வு நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் யாழ். மூளாய் சுழிபுரத்தில் அமைந்துள்ள அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையில் இடம்பெற்றது. Read more

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் டுவிட்டர் குறிப்பொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பல விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். Read more

பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பின்போது நான் ஒருவேளை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால், நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக ஒழித்திருப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். Read more

கொவிட் தொற்று காரணமாக, ராகம புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு பணி புரியும் ஒரு புகையிரத நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், மேலும் இரண்டு அதிகாரிகளுக்கு அறிகுறிகள் தென்பட்டதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more

நாட்டில் உள்ள எரிபொருள் நிலையங்களில் பாதியளவில் தற்போது தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின்படி எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (27ஆம் திகதி) வரை 481 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த முறையின் கீழ் எரிபொருளை விநியோகித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார். Read more