Header image alt text

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட காந்தீயம் அமைப்பின் செயலாளர் வைத்தியர் சோமசுந்தரம் இராஜசுந்தரம் அவர்களுக்கும் ஏனைய இனப்பற்றாளர்களுக்குமான அஞ்சலி நிகழ்வு இன்றுமுற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்றது. Read more

27.07.1983இல் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட காந்தீயத்தின் செயலாளராக செயற்பட்டு, ஏதிலிகள் குறித்த கழகத்தின் எண்ணங்களை செயல் வடிவமாக்கிய வைத்தியர் தோழர் இராஜசுந்தரம் மற்றும் தோழர்கள் ரொபேட் , சேயோன், மயில்வாகனம், சுதாகரன், அரபாத், அன்பழகன் ஆகியோரின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

புதிய அரசாங்கத்தின் முதலாவது யோசனையாக பாராளுமன்றத்தில், இன்று (27) கொண்டுவரப்பட்ட அவசரக்காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதனடிப்படையில் 57 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27) முற்பகல் சந்தித்தார். ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் உறவுகளை வலுவான அணுகுமுறையின் மூலம் முன்னெடுத்துச் செல்வது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. Read more

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்​தடை, ஓகஸ்ட் 2ஆம் திகதிவரையிலும் உயர்நீதிமன்றத்தால் இன்று (27) நீடிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூரில் தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதி மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்தும் சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என தகவல் உறுதிப்படுத்தியுள்ளன. Read more