Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் அனைத்து உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களே, Read more

கழகத்தின் வன்னி மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் வசந்தன் (சரவணபவானந்தன் சண்முகநாதன்) அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (15.07.2022) மாலை 5.00 மணியளவில் அவர் மற்றும் அவரது புதல்வன் செல்வன். சண்முகநாதன் வற்சலன் ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. Read more

15.07.1998இல் மரணித்த கழகத்தின் வன்னி மாவட்ட முன்னாள் பொறுப்பாளரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் வசந்தன் (சரவணபவானந்தன் சண்முகநாதன்), அவரது புதல்வன் செல்வன். சண்முகநாதன் வற்சலன், மைத்துனர் தாசியஸ் ஸ்டெனிஸ் லொஸ் மற்றும் மெய்க்காவலர்களான நோயல் ஹெட்டியாராய்ச்சி, சரத் வீரசேகர ஆகியோரின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

15.07.1983இல் வவுனியாவில் மரணித்த தோழர் கிறிஸ்டி (இ.வசந்தராஜா- திருகோணமலை) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

பதில் ஜனாதிபதியாக இன்று (15) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவை, அடுத்த ஜனாதிபதியாக நியமிப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது. Read more

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நீதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர், எதிர்வரும் 28ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல, உயர் நீதிமன்றம், இன்று (15) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை, ஐவர் அடங்கிய நீதியரசர் குழு பிறப்பித்துள்ளனர்.   Read more

பதில் ஜனாதிபதியாக பதவி​​யேற்றுக்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரண்டு அதிரடி தீர்மானங்களை அறிவித்துள்ளார். அதிமேதகு ஜனாதிபதி என்று பயன்படுத்துவதை தடைச் செய்தார். அத்துடன் ஜனாதிபதி கொடியையும் இரத்துச் செய்வேன் என்று அறிவித்துள்ளார். நாட்டுக்கு தேசிய கொடி மட்டும் போதும் என்றும் அறிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 19ஆம் திகதி கோரப்படும். அதன்பின்னர், 20ஆம் திகதியன்று வாக்கெடுப்பு நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் புதிய ஜனாதிபதியை நியமிக்கும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்படுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். Read more