Header image alt text

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் இடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் டுவிட்டர் குறிப்பொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பல விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். Read more

பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பின்போது நான் ஒருவேளை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால், நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக ஒழித்திருப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். Read more

கொவிட் தொற்று காரணமாக, ராகம புகையிரத நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு பணி புரியும் ஒரு புகையிரத நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், மேலும் இரண்டு அதிகாரிகளுக்கு அறிகுறிகள் தென்பட்டதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more

நாட்டில் உள்ள எரிபொருள் நிலையங்களில் பாதியளவில் தற்போது தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின்படி எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (27ஆம் திகதி) வரை 481 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த முறையின் கீழ் எரிபொருளை விநியோகித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார். Read more