கனடா, டொரன்ரோவைச் சேர்ந்த பிரசாத் சரண்யா தம்பதியினர் தமது திருமண நாளை (28.08.2022) முன்னிட்டு, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கன்குளம், கிழவன்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழும் குடும்பங்களுக்கு, ஒவ்வொரு கிராமத்திலும் 15 கும்பங்களுக்கு மொத்தமாக 60,000 ரூபா எனும் அடிப்படையில் இரண்டு கிராமங்களுக்குமாக 120,000 ரூபாவினை வழங்கியுள்ளனர். Read more
07.09.1987இல் தம்பனையில் மரணித்த தோழர்கள் ராமு (சா.அகிலன் – ஈச்சந்தீவு), தமிழ்ச்செல்வன்( சுழிபுரம்),ஹென்றி ( முருகானந்தம் – பாலையூற்று), வேந்தன்( சுழிபுரம்), டியூக் (ஹரிச்சந்திரன்-கன்னியா), மனோரஞ்சன்(கனகசுந்தரம்), ஞானராஜ் ( பன்குளம்), கரன்( மட்டக்களப்பு), குமார் ( தீவுப்பகுதி), ரகுன் ( யாழ்நகர்), ரஞ்சன் (திருகோணமலை),சோதிராஜ்(மட்டக்களப்பு), ஜீவா (மட்டக்களப்பு) ஆகியோரினது 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
பாடசாலை மாணவர்கள் போதைபொருளுக்கு அடிமையாவதைத் தடுக்கும் நோக்கில், மாணவர்களின் பாடசாலை பையை சோதனையிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு எதிராகவும் சோசலிச இளைஞர் சங்கம் மற்றும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ஆகியோர் கொழும்பில் இன்று (07) சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இராஜாங்க அமைச்சர்கள் 36 பேர், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நாளை (08) காலை பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டின் (Michelle Bachelet) அறிக்கை இன்று வௌியிடப்பட்டது.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் பிறப்பு, திருமண மற்றும் மரண சான்றிதழ்களுக்கு செல்லுபடிக்காலம் வரையறுக்கப்படவில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அமெரிக்கா பங்கேற்கும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் (Janet Yellen) தெரிவித்துள்ளார்.