ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகக் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் தோழர் சூட்டி அவர்களின் தலைமையில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர், உபதலைவர் தோழர் கேசவன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கடந்த (27/08/2022) நடைபெற்றது.

இதில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக முரளி (கா.கமலநாதன்) அவர்களும், பொருளாளராக விமலன் (க.விமலநாதன்) அவர்களும், இளைஞர் அணிப் பொறுப்பாளராக ச.மகேஸ்வரன் அவர்களும், மகளிர் அணிப் பொறுப்பாளராக செல்வி. சீ.இந்திராணி அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும், பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக சு.தேவராஜா அவர்களும், மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக மா.சோமசுந்தரம் அவர்களும், கல்குடா தொகுதி அமைப்பாளராக சீ.சங்கரப்பிள்ளை அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.