ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது கூட்டத்தொடரில், அதன் இறுதித் தீர்மான அறிக்கையில் இலங்கையின் வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் மற்றும் அபிலாஷைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. Read more
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிவாதிகள் அறுவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில், இன்று (15) அதிகுற்றப்பத்திரம் பகிரப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 13 கைதிகள் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒருவர் சுகவீனமுற்று சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனாவின் எதிர்கால வைரஸ் திரிபுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் விழிப்புணர்வைத் தக்க வைத்துக் கொள்ளுமாறும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உலக நாடுகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நிலவிய கொவிட் சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல சேவிதரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் நேற்று (14) அனுமதிக்கப்பட்டது.