அவுஸ்திரேலியாவில் வசிக்கும் கழகத் தோழர் கீர்த்தி அவர்களின் நிதிப்பங்களிப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக கட்சியின் இரு கிராம மகளிர் அமைப்புகளுக்கு தலா ரூ 50,000.00 வீதம் வழங்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் செயற்படும் மகளிர் அமைப்புக்கும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை நாவற்காடு கிராமத்தில் செயற்படும் மகளிர் அமைப்புக்கும் மொத்தமாக 100,000 ரூபாய் தொகை, மகளிர் அமைப்பின் அங்கத்தவர்களினது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, சுழற்சி முறையிலான கடனடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (18.09.2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வுகளில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் சிரேஷ்ட உபதலைவர் வே.நல்லநாதர், பொருளாளர் க.சிவநேசன்(பவன்), ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் இரா.தயாபரன், இளைஞர் அணிப் பொறுப்பாளர் ஞா. யூட்சன், அவுஸ்திரேலியா நாட்டின் செயற்பாட்டாளர்கள் தோழர் கீர்த்தி, தோழர் சிவபாலன், மாவட்ட செயலாளர் க.சிவலிங்கம், மாவட்ட இளைஞர் பிரிவு பொறுப்பாளர் த. மயூரன், பிரதேச சபை உறுப்பினர் ஜோன்சன், சமூக ஆர்வலர் எஸ்.சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
