கட்சியின் மன்னார் மாவட்ட நிர்வாகத் தெரிவுக் கூட்டம் கட்சியின் தலைவர் த. சித்தார்த்தன் அவர்களின் தலைமையில், செயலாளர் தோழர். இரட்ணலிங்கம், தேசிய அமைப்பாளர் தோழர் ஆ. சிறீஸ்கந்தராஜா, நிர்வாகப் பொறுப்பாளர் தோழர் ம. பத்மநாதன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 18.09.2022 அன்று முருங்கன் கமம் கிராமத்தில் நடைபெற்றது.

இதன்போது மாவட்டத்தின் அமைப்பாளராக தோழர் சம யோகானந்தராசா (சித்தப்பா) அவர்களும், செயலாளராக தோழர் அந்தோனி ஜேம்ஸ் அவர்களும், பொருளாளராக தோழர் மேரி லூட்ஸ் குறூஸ் (மாலா) அவர்களும், மகளிர் பிரிவுப் பொறுப்பாளராக தோழர் சுப்பிரமணியம் வரோணிக்கா (ரமா) அவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

பிரதேச அமைப்பாளர்கள் தெரிவில், மன்னார் நகரசபை பிரதேசத்தின் அமைப்பாளராக தோழர் அந்தோனி புஷ்பராசா (வசந்தி) அவர்களும், மடுப் பிரதேசத்தின் அமைப்பாளராக தோழர் காத்தலிங்கம் வேலும்மயிலும் (மயிலன்) அவர்களும் முசலிப் பிரதேசத்தின் அமைப்பாளராக தோழர் அந்தோனி செபமாலைதூரம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.