சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு ஆண்களும் பெண் ஒருவரும் 3 சிறார்களுமே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். Read more
கொழும்பிலுள்ள பல முக்கிய பகுதிகள் உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ், ‘உயர் பாதுகாப்பு வலயங்கள்’எனக் குறிப்பிட்டு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, அடிப்படை உரிமை மனுக்கள் இரண்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று (27) டோக்கியோவில் சந்தித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , சிங்கப்பூர் பிரதமரிடம் விளக்கமளித்தார். சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முன்னுரிமை வழங்குவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பிடியாணை பிறக்கப்பட்டிருந்த இருவர் இந்தியாவின் தமிழ்நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.