மலர்வு : 25.03.1946Posted by plotenewseditor on 31 October 2023
						Posted in செய்திகள் 						  
மலர்வு : 25.03.1946Posted by plotenewseditor on 31 October 2023
						Posted in செய்திகள் 						  
சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பலின் கடல்சார் ஆய்வுப் பணிகள் இன்றுடன்(31) நிறைவடைகின்றன. குறித்த கப்பல் கொழும்பு பெந்தர கடற்பகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி கமல் தென்னகோன் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பில் நேற்று(30) ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனக்கப்பலுக்கு 48 மணித்தியாலங்கள் வழங்கப்பட்டுள்ளன. Read more
Posted by plotenewseditor on 31 October 2023
						Posted in செய்திகள் 						  
அகில இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்(PHI) ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் இன்று(31) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. போக்குவரத்து கொடுப்பனவை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.போபிட்டிய தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 30 October 2023
						Posted in செய்திகள் 						  
30.10.2007இல் முருகனூரில் மரணித்த தோழர்கள் செல்வராஜா (சிதம்பரப்பிள்ளை செல்வராஜா – சிதம்பரபுரம்), ரஞ்சன் (இருதயம் வேதராசா) ஆகியோரின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று
Posted by plotenewseditor on 30 October 2023
						Posted in செய்திகள் 						  
கைதடி சனசமூக நிலையங்களின் ஒன்றியமும் குமரநகர் சனசமூக நிலையமும் இணைந்து நடத்திய முத்தமிழ் விழா இன்று திங்கட்கிழமை (30.10.2023) இரவு கைதடி குமரநகர் சனசமூக நிலைய நகுலன் கலையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் செல்வரத்தினம் மயூரன் அவர்களும் கலந்து கொண்டனர்.Posted by plotenewseditor on 30 October 2023
						Posted in செய்திகள் 						  
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.< இதன்போது, இன்று ஆரம்பமாகவிருந்த அகழ்வு பணிகளை அடுத்த மாதம் 20ஆம் திகதி முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 30 October 2023
						Posted in செய்திகள் 						  
துருக்கி மற்றும் இலங்கை இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று(30) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் முதலாவது சேவையில், துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் 261 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கடந்த 10 வருடங்களாக மாலைதீவின் ஊடாகவே கட்டுநாயக்கவிற்கான விமான சேவையை துருக்கி விமான சேவை நிறுவனம் முன்னெடுத்து வந்தது.  துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து கட்டுநாயக்கவிற்கான நேரடி விமான பயணத்திற்கு சுமார் 08 மணித்தியாலங்கள் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 29 October 2023
						Posted in செய்திகள் 						  
2014.10.29Posted by plotenewseditor on 29 October 2023
						Posted in செய்திகள் 						  
குடிபோதையில் வாகனம் செலுத்தி இரண்டு வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவை எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டியிலிருந்து தெஹிவளை நோக்கி முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஓட்டிச் சென்ற கார், வெள்ளவத்தை கடற்கரையோரத்தில் உள்ள மிராஜ் ஹோட்டலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரையும் பஸ்ஸையும் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார். Read more
Posted by plotenewseditor on 29 October 2023
						Posted in செய்திகள் 						  
தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டுவில் குடும்ப முன்பள்ளிகளின் சிறுவர் தினமும், ஆசிரியர் தினமும் இன்று காலை மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்தில் இடம்பெற்றது. மட்டுவில் குடும்ப முன்பள்ளிகளின் தலைவி சா.பிதாசினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகவும் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன், செயற்பட்டு மகிழ்வோம் இணைப்பாளர் ம.ராசலட்சுமி, முன்பள்ளிகளின் வலய இணைப்பாளர் செ.ஆனந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டிருந்தனர்.