Header image alt text

30.10.2007இல் முருகனூரில் மரணித்த தோழர்கள் செல்வராஜா (சிதம்பரப்பிள்ளை செல்வராஜா – சிதம்பரபுரம்), ரஞ்சன் (இருதயம் வேதராசா) ஆகியோரின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

கைதடி சனசமூக நிலையங்களின் ஒன்றியமும் குமரநகர் சனசமூக நிலையமும் இணைந்து நடத்திய முத்தமிழ் விழா இன்று திங்கட்கிழமை (30.10.2023) இரவு கைதடி குமரநகர் சனசமூக நிலைய நகுலன் கலையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் செல்வரத்தினம் மயூரன் அவர்களும் கலந்து கொண்டனர்.

Read more

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.< இதன்போது, இன்று ஆரம்பமாகவிருந்த அகழ்வு பணிகளை அடுத்த மாதம் 20ஆம் திகதி முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

துருக்கி மற்றும் இலங்கை இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று(30) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் முதலாவது சேவையில், துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் 261 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கடந்த 10 வருடங்களாக மாலைதீவின் ஊடாகவே கட்டுநாயக்கவிற்கான விமான சேவையை துருக்கி விமான சேவை நிறுவனம் முன்னெடுத்து வந்தது.  துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து கட்டுநாயக்கவிற்கான நேரடி விமான பயணத்திற்கு சுமார் 08 மணித்தியாலங்கள் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. Read more