வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் இன்று நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்ததோடு இன் நிகழ்வில் திருநாவற்குளம் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர் Read more
		    
02.10.2023 ஆகிய இன்று திருகோணமலை பாலையூற்று கோவிலடி கிராமப்பகுதியில் பெண்களின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்குகின்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வண்ணம் மாதர்களுக்கான இலவச தையல் தொழிற்பயிற்சி ஆரம்பமாகியது.
சம்பந்தப்பட்ட தரப்பினருடன் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளாமல் இலங்கை அரசாங்கம் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு மேற்கொள்ளும் முயற்சி தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு ஆசிய பிராந்தியத்தில் இணையத்தள சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பாகும். 
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று (செங்கலடி), கோறளைப்பற்று தெற்கு (கிரான்) ஆகிய இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் மேய்வதற்குரிய மேய்ச்சல் தரையாக சுமார் இருபத்தைந்தாயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் கால்நடைப் பண்ணையாளர்களால் வழமையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதியின் இராஜினாமா தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி T.சரவணராஜா கடந்த 29ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். அண்மைக் காலத்தில் அதிகளவில் பேசப்பட்ட சில வழக்குகள் நீதவான் T.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.