Header image alt text

இலங்கைக்கு கடன் வழங்கிய பிரதான நாடுகளான இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடனைக் குறைத்து, திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிப்பது தொடர்பில் இம்மாத இறுதிக்குள் இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளதாக Reuters செய்தி வௌியிட்டுள்ளது. இலங்கை தனது வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவது தொடர்பாக ஜப்பான், சீனா, இந்தியா உள்ளிட்ட இருதரப்பு கடன் வழங்குநர்களுடன்  பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக ஜப்பானின் Sankei பத்திரிகையை  மேற்கோள் காட்டி  Reuters தெரிவித்துள்ளது. Read more

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தாமும் இலங்கை அரசாங்கமும் நிராகரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜெர்மனி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

வவுனியா கோவில்குளம் ஐயப்பன் முன்பள்ளியில் இன்று (03.10.2023) நடைபெற்ற மாணவர்களுக்கான சந்தை நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்தபோது Read more