முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் இன்று 4 ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு நீதவான் பதவி விலகிய விவகாரத்தில் நீதி வழங்குமாறு கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, முல்லைத்தீவு நீதவான் T. சரவணராஜாவின் பதவி விலகலுக்கு நீதி கோரியும் ஜனநாயகத்தில் கை வைக்க வேண்டாம் என வலியுறுத்தியும் கொழும்பில்  சட்டத்தரணிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more
		    
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான படகு சேவையை ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்க முடியும் என இந்திய உயர்ஸ்தானிகர் தன்னிடம் அறிவித்ததாக  அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் படகு சேவை தொடர்பில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனை கூறினார். 
05.10.1998இல் மன்னாரில் மரணித்த தோழர் கோபு (கந்தசாமி தமிழ்வாணன்- நெடுங்கேணி) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…