முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் இன்று 4 ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு நீதவான் பதவி விலகிய விவகாரத்தில் நீதி வழங்குமாறு கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, முல்லைத்தீவு நீதவான் T. சரவணராஜாவின் பதவி விலகலுக்கு நீதி கோரியும் ஜனநாயகத்தில் கை வைக்க வேண்டாம் என வலியுறுத்தியும் கொழும்பில்  சட்டத்தரணிகள் இன்று கவனயீர்ப்பு ​போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு  போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள், வாழைத்தோட்டம்  பொலிஸ் நிலையம் வழியாக பேரணியொன்றை முன்னெடுத்து  மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக கூடினர்.