வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸ் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையில் 03.10.2023 சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது ஆளுநர் வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்து தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றி தௌிவுபடுத்தினார். Read more
		    
கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த 17 பேரில் ஐவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.  காயமடைந்த ஏனையோருக்கு அவசர விபத்துப்பிரிவில் சிகிச்சையளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தெனியாயவிலிருந்து கொழும்பு வந்து கொழும்பிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் மத்துகம நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.