நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சபரகமுவ தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். மேல் சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாத்தளை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுகிறது. Read more
		    
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்டமாக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது குறித்து 7 தமிழ் தேசிய கட்சிகள் நேற்றைய தினம் (06) ஒன்றுகூடி ஆராய்ந்தனர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியினர் அடுத்த வாரம் வடக்கு கிழக்கு சார்ந்த வகையில் நிர்வாக முடக்க போராட்டத்திற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்தனர்.