வவுனியா நீலியாமோட்டை சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்விகற்கும் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள 17 மாணவர்களுக்கு 07.10.2023 சனிக்கிழமை வவுனியாவைச் சேர்ந்த தற்போது கனடா டொரன்ரோவில் வசித்து வருகின்ற திரு. சார்ள்ஸ் ஜோசெப் (ஆரத்தி சுப்பர் சென்டர் உரிமையாளர்) குடும்பத்தினரின் ரூபா 56,500/-நிதியுதவியில் தைத்த பாடசாலைச் சீருடைகளும், மழைக் கவசங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக பாடசாலையின் அதிபர் திரு. நடேசு சுவேதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் உதவி வழங்கும் நிகழ்வில்
கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் இரா.தயாபரன், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் சு.ஜெகதீஸ்வரன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத் தலைவர் ப.செல்வக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான சீருடைகள், மழைக்கவசம் என்பவற்றை வழங்கிவைத்தனர்.

