ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் ஜனாதிபதி செலயகத்தில் இன்று (11) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய – இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
		    
டேவிட் ஐயா என கழகத் தோழர்களாலும் காந்தீய தொண்டர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட சொலமன் அருளானந்தம் டேவிட் (டேவிட் ஐயா) அவர்களின் எட்டாமாண்டு நினைவு நாள் இன்று….
இஸ்ரேலிய மக்கள் தொகை, குடியேற்ற அதிகாரசபை மற்றும் வௌியுறவு அமைச்சின் அனுமதி பெறப்பட்ட பின்னர் மாத்திரம், இனிவரும் காலங்களில் இஸ்ரேலிய தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல்களின் காரணமாக உருவாகியுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார்.