Header image alt text

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் நிலவும் கடுமையான மோதல்களை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கிணங்க, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கை மக்களின் தேவைகள் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை வழங்குவதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. Read more

ஐந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசாவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பிரஜைகளிடம் விசாவிற்கான கட்டணத்தை அறவிடவேண்டாமென உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

நசீர் அஹமட் வகித்து வந்த சுற்றாடல் அமைச்சர் பதவி ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.  சுற்றாடல் அமைச்சு தமது பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென தீர்மானித்து, ஜனாதிபதி வழங்கிய உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் செயலாளரால் அதிவிசேட வர்த்தமானி  வௌியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக இருந்த நசீர் அஹமட், கட்சியின் நிலைப்பாட்டுக்கு முரணாக அமைச்சுப் பதவியை பெற்றதனால், கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டார். Read more