மயிலத்தமடுவில் மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பிரச்சினை தொடர்பில் இன்று(15) ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதி செயலாளர், ஆளுங்கட்சி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், காவல்துறைமா அதிபர் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். Read more
		    
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 7 பேரில் ஒருவரான சுதந்திரராஜா என்ற சாந்தன், தாம் தாயகம் திரும்பி தனது வயது முதிர்ந்த தாயுடன் வாழ உதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு இது தொடர்பிலான மனுவை அவர் அனுப்பி வைத்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.