ஜோர்தான் – இஸ்ரேல் எல்லைப் பகுதியில் இலங்கை பெண்கள் இருவர் கடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். குறித்த இருவர் பற்றிய தகவல்கள் தேடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் காரணமாக காணாமல் போன 2 இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என நிமல் பண்டார தெரிவித்துள்ளார். Read more
		    
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தோனேசிய ஜனாதிபதி ஜொக்கோ விடோடோவை (Joko Widodo) சந்தித்துள்ளார். சீன விஜயத்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், கலாசாரம் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான யுத்தத்தில் பலஸ்தீனத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர், பலஸ்தீன தூதுவருடன் கலந்துரையாடியுள்ளார்.  இதன்போது, ஏற்பட்டுள்ள மோதலை பேச்சுவார்த்தையினூடாக தீர்த்துக்கொள்வது, இருநாட்டு மக்களினதும் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிக முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.