இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கக் கோரி தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் விடுவிக்கக்கோரி,  மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் இராமேஸ்வரம் மீனவர்கள் இராமேஸ்வரம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 15 ஆம் திகதியிலிருந்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Read more
		    
எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, மட்டக்களப்பு தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைகள் அபகரிக்கப்படுகின்றமை, தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அங்கு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் அழைப்பில் வடக்கு கிழக்கு முழுவதும் எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை பூரண கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி வடக்கு கிழக்கு முழுமையாக இடம்பெறவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் வடக்கின் பிரதான நகரங்களில் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். 
18.10.2005இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் சேகர் (இராஜசிங்கம் இராஜசேகர் – சேற்றுக்குடா) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS ‘Airavat’ யுத்த கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (18) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. 124.8 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 170 கடற்படை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், அதன் பணியாளர்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து பல பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.