நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளையுடன் (20) தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, எதிர்வரும் ஜனவரி மாதம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. வடகிழக்கு பருவ மழை ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். நான்கு தசாப்தங்களின் பின்னர் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த 14 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை வௌியிட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று(19) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, அப்போதைய மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் எழ வேண்டும் என கருத்து வௌியிட்டதாகக் கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.