பலஸ்தீன தேசத்தின் மீது, அங்குள்ள பொதுமக்களின் நிலைகள் மீது, இஸ்ரேல் தொடர்ச்சியாக நடாத்திவரும் கனரக படைக் கருவிகளிலான தாக்குதல்களை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) வன்மையாகக் கண்டிப்பதோடு பலஸ்தீன தேசத்து மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு தொடர்ச்சியான எமது ஆதரவையும் உறுதிப்படுத்திக் கொள்கிறது.
		    
ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் உள்ளிட்ட சுமார் 60 ஆதிவாசிகள் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். குறித்த குழுவினரை வட மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் வரவேற்றார். 
இந்திய அமைதி காக்கும் படையினரின் தாக்குதலில் உயிர்நீத்தவர்களின் 36 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று அனுஷ்டிக்கப்பட்டது. மற்றுமொரு நினைவேந்தல் நிகழ்வு  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. இதன்போது பொதுச்சுடரேற்றி , உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.