ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் உள்ளிட்ட சுமார் 60 ஆதிவாசிகள் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். குறித்த குழுவினரை வட மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் வரவேற்றார்.
ஆதிவாசிகளின் யாழ்ப்பாணத்திற்கான முதாலாவது பயணமாக இது அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்திபெற்ற இடங்களை இவர்கள் பார்வையிடவுள்ளனர்.