Header image alt text

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சுப்பிரமணியம் சதானந்தம்
(தோழர் ஆனந்தியண்ணர்)
மலர்வு : 16.05.1945
உதிர்வு : 22.10.2021
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), அதன் வெகுஜன முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் மறைந்த பொதுச்செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில், அவருடன் இணைந்து கடந்து வந்த பாதையின் அனுபவங்களை மீண்டும் நினைவிற் கொள்வதன் மூலம் எமது அஞ்சலிகளை கணிக்கையாக்குவோம்.

Read more

22.10.2020 இல் மரணித்த, காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னாள் உபதலைவர்களுள் ஒருவருமான அமரர் வைத்திலிங்கம் பாலச்சந்திரன் (பாலா அண்ணர்) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று..
மலர்வு – 1951.12.18 உதிர்வு – 2020.10.22

Read more

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.  இதற்கமைய, மும்பையில் இடம்பெற்ற சர்வதேச கடல்சார் மாநாட்டின் போது, துபாய் நிறுவனமொன்றுடன் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனம் கப்பல் போக்குவரத்திற்காக இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக துறைமுக அதிகாரிகளை மேற்கோள் காட்டி தமிழக செய்திகள் குறிப்பிட்டுள்ளன. Read more

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (21) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் சாத்தியமாகுமாகும் பட்சத்தில் மாகாண சபைத் தேர்தலையும் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.