சம்பளப் பிரச்சினை அடங்கலாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி கல்வி அமைச்சு நோக்கி பேரணியொன்றை முன்னெடுக்க முயன்ற ஆசிரியர் குழாத்தினரை பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் செய்து கலைத்தனர். அதிபர் , ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் தொழிற்சங்க ஒன்றியம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பேரணி பெலவத்தை புத்ததாச மைதானத்திற்கு முன்பாக இன்று (24) பகல் ஆரம்பமானது. Read more
சீனா அதன் இராணுவ விநியோக மையமாக இலங்கையை பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் அந்நாட்டு காங்கிரசுக்கு அனுப்பியுள்ள வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளை சீனா அதன் உலக இராணுவ விநியோக மையங்களாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண முன்பள்ளிகளின் சண்டிலிப்பாய் கோட்ட கிளைச் சங்கத்தின் ஆசிரியர் தின நிகழ்வு இன்று இடம்பெற்றது. இச் சங்கத்தின் இணைப்பாளர் திருமதி யோகேந்திரன் கேமநளனி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்து சிறப்பித்திருந்தார்.