அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்காக தெரிவு செய்யப்பட்டு கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தாமதமின்றி அந்த நன்மைகளை பெற்றுக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர். நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். உரிய வகையில் வங்கிக் கணக்குகளை திறக்காததன் காரணமாக ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 261 பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். Read more
யாழ். பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை 200 மில்லியன் ரூபாய் செலவில் விரிவுபடுத்த உள்ளதாக துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் தற்போதுள்ள
தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நிறுவனங்கள், அறிவுச் செயன்முறையை வெளியிலிருந்து வழங்கும் நிறுவனங்கள், வியாபாரச் செயன்மறையை வெளியிலிருந்து நிறுவனங்கள் மற்றும் வேறு நாடுகளில் அமைந்துள்ள வியாபார நிறுவனங்களுக்கான கணக்கு, நிர்வாகம் மற்றும் தொழிநுட்ப நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அலுவலகங்களில் பணிபுரிகின்ற பெண்களுக்கு இரவு வேளைகளில் பணியாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.