மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் இரண்டு தடவைகள் நீர்த்தரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கொழும்பு புதிய நகர மண்டபத்திற்கு முன்பாக இன்று எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது. கல்வியை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ மாணவர் செயற்பாட்டுக் குழு இந்த பேரணியை முன்னெடுத்தது.

அதனையடுத்து, மருத்துவ பீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டாளர் நவீன் தாரக உள்ளிட்ட மாணவ செயற்பாட்டாளர்கள் சிலரையும் பொலிஸார் அழைத்துச்சென்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.